அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.. பழைய ஓய்வூதியத்துக்கான வல்லுநர் குழு பதவி காலம் நீட்டிப்பு!
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் வல்லுநர் குழு பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வல்லுநர் குழு அமைத்து ஓய்வு திட்டம் குறித்து பரிசீலிப்போம் என்று சொல்லியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.
அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தார். இதில், நிதித்துறை அதிகாரி ஒருவரை உறுப்பினர் செயலாளராகவும், வெளியிலிருந்து 3 வல்லுநர்களை உறுப்பினர்களாகவும் நியமித்தனர்.

இதன் ஆயுள் காலம் 3 மாதங்கள். ஆனால், ஒரேஒரு முறைதான் இந்த குழு கூடியது. அதற்குள் ஆயுள் காலம் முடிய, மேலும் 3 மாதங்கள் நீட்டித்து 4 மாதங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தது நிதித்துறை. இந்த நிலையில், அரசு ஊழியர் சங்கங்கள் சிலவற்றை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது வல்லுநர் குழு.
ஆனாலும் அதில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படமுடியவில்லை. இந்தச்சூழலில், அதன் ஆயுள் காலம் கடந்த செப்டம்பர் 26 -ந்தேதியோடு முடிந்து போனது. செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டானதால் வல்லுநர் குழுவின் காலம் நீட்டிப்பு குறித்து எந்த முடிவையும் அதிகாரிகளால் எடுக்க முடியவில்லை. விரைவில் வீடு திரும்பி விடுவார் என்கிற நம்பிக்கையில் இது குறித்து அக்கறைக்காட்டவில்லை அதிகாரிகள்.
டிசம்பர்க்குள் கால நீட்டிப்பு செய்யப்படவில்லையெனில் குழு கலைந்துவிடும் என்பதால், தற்போது வல்லுநர் குழுவின் ஆயுளை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஆணைப்பிறப்பித்துள்ளது நிதித்துறை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications