விஜய் கிறிஸ்துவர் தானே? ஆதாரம் கொடுத்தா ஏன் மெர்சலாறீங்க?- எச்.ராஜா
நடிகர் விஜய் கிறிஸ்துவர் என்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் ஏன் மெர்சலாகிறீர்கள் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் விஜய் கிறிஸ்துவர் என வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரம் கொடுத்தால் ஏன் மெர்சலாகிறீர்கள் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகளுக்கு எதிராக விஜய் வசனம் பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர்கள் இந்த வசனங்களை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்யை ஜோசஃப் விஜய் என்று தனது டுவிட்டரில் எச்.ராஜா குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதோடு விடாமல் ஜோசஃப் விஜய் என இருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டார். இதனால் கடந்த சில தினங்களாக ராஜாவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
இதுகுறித்து எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜய் தனது படத்தில் நியாயமாக பேசியிருந்தால் நான் அவரை குறை கூறியிருக்க மாட்டேன். ஆனால் அவர் பொய் பேசிவிட்டார். சாராயத்துக்கு ஜிஎஸ்டி இல்லை என்பது வடிக்கட்டின பொய்யாகும்.
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகள் இலவசம் என்பதை போன்ற ஒரு வடிக்கட்டின பொய் வேறு உண்டா. அந்த கருத்துகள் மக்கள் மனதில் தவறாக பதிந்துவிட கூடாது என்பதால் பொய் என்று பேசினோம். அவரது உண்மையான பெயரை கூறினால் கூட ஏன் எரிச்சல் வருகிறதென்றால் அவர்கள் மெர்சலாகிவிட்டார்களா.
அவரது பெயர் வாக்காளர் அடையாள அட்டையிலும், அவரது லெட்டர் பேடில் சி.ஜோசஃப் விஜய் என்றுதானே உள்ளது. மேலும் லெட்டர் ஹெட்டில் ஜீசஸ் சேவ்ஸ் என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இதை பார்த்தாலே எச்.ராஜா பேசியது உண்மை என மக்களுக்கு புரியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications