ஜெ. அளவுக்கு ஓ.பி.எஸ். இல்லை.. சொல்கிறார் எச் . ராஜா!
குற்றாலம்: மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சட்டத்திற்கு ஆதரவளித்த அதிமுகவுக்கு பாராட்டு தெரிவிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகளை விரைவுபடுத்த கட்சியினருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு இன்று நெல்லை மாவட்டம் குற்றாலம் வந்தார் வந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையி்,

நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் மக்கள் நலன் கருதி அவசரசட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கான 80சதவிகிதப்பணிகள் நிறைவு பெறும். அதன் மூலம் 400 சிறிய,பெரிய பாசானத் திட்டங்கள் முடங்கிப் போய் உள்ளன.
இத்திட்டங்கள் மூலம் விவசாயத்திற்கான மின்சாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட திட்டங்கள் முன்னேற்றமடையும். மக்கள் நலன் கருதி முற்போக்கான, முன்னேற்றகரமான இந்த திட்டத்தை லோக்சபாவில் நிறைவேற்ற அதிமுக ஆதரவு அளித்தது.
அதற்காக பாஜக சார்பில் வரவேற்கிறோம்,பாராட்டுகிறோம். வன்முறையை பாஜக ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மணிரத்தினம் வீட்டின் மீது குண்டு வீசிய சம்பவங்கள் அரங்கேறிய சம்பவங்கள் நடந்ததுன்டு. விளம்பரத்திற்காக கேவலமான நிலைகளை எடுக்க கூடாது.
50சதவிகித உறுப்பினர் சேர்க்கை ஆகியுள்ளது. இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நான் இங்கு வந்துள்ளேன்.
ஜெயலலிதா முதல்வராக இருந்து செயல்பட்ட அளவுக்கு பனீர் செல்வம் செயல்படவில்லை என்பது கருத்தாக உள்ளது. அவர் ஜெயலலிதா மாதிரி ஆட்சியை நல்ல முறையில் கொண்டு வருவார். தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. இதில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்.

மக்கள் புறந்தள்ளியவர்களைக் கொண்டு மீடியாக்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதை நிறுத்த வேண்டும். மத்திய அரசு கடந்த 10ஆண்டுகளில் தற்போதுதான் சிறப்பாக 100க்கு 103 என்ற அளவில் செயல்படத் தொடங்கியுள்ளது
ரயில்வே திட்டங்களைப் பொருத்தவரை கடந்த 6 ஆண்டுகளில் அறிவித்ததோடு சரி எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதனால் காத்திருக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த பணிகளை முடித்த பின் புதிய திட்டங்கள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.
வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அந்த சமயத்தில் உள்ள சூழலை பொருத்து அமையும் என்றார் ராஜா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications