உதயநிதி தமிழ் பெயரா? எச். ராஜாவிற்கு டவுட்டாம்
உதயநிதி தமிழ் பெயரா? என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார் எச். ராஜா.
சென்னை: உதயநிதி என்பது தமிழ் பெயரா எனக்கு ஒரு சந்தேகம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எச் ராஜா.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலின் என்ற தனது பெயர் தமிழ்ப் பெயர் அல்ல. காரணப்பெயர் என்று கூறினார். தொடர்ந்து தனக்கு பெயர் வைக்கப்பட்டது எப்படி என்பதையும் குறிப்பிட்டார்.
என் தந்தை கருணாநிதி முதலில் எனக்கு அய்யாதுரை என்று பெயர் சூட்டவே விரும்பினார். தந்தை பெரியாரை ஐயா என்றும் அழைப்பார்கள். அறிஞர் அண்ணாவுக்கு துரை என்ற பெயரும் உண்டு. இந்த இருவர் மீதும் பற்று கொண்டிருந்த எனது தந்தை எனக்குஅய்யாதுரை என்று பெயர் வைக்க முடிவு செய்திருந்தார்.
அப்போது, ரஷ்யாவில் ஸ்டாலின் இறந்ததற்காக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் என் தந்தை பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து ஒரு சீட்டைக் கொடுத்திருக்கிறார். அந்தச் சீட்டில் உங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. உடனே, அவர் தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்றும் அவனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுவதாகவும் மேடையிலேயே அறிவித்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார் ஸ்டாலின்.
ஆமாம் உதயநிதி என்பது தமிழ் பெயரா? சும்மா ஒரு டவுட்
— H Raja (@HRajaBJP) January 29, 2018
இதனைக்கேட்ட எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், உதயநிதி தமிழ் பெயரா எனக்கு ஒரு டவுட் என்று அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். ட்விட்டரில் எச் ராஜா சர்ச்சையாக பதிவுகளை போடுவது வழக்கமாகி வருகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications