பெட்ரோல் டீசல் விலை உயர்வை திசை திருப்பவா எச் ராஜா விவகாரம்?
சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை திசை திருப்புவதற்காக எச் ராஜா விவகாரம் எழுப்பப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக அரசு, காங்கிரஸ் அரசால் நிகழ்ந்த விலையேற்றங்கள் குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ், காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 76 ஆக இருந்தது.
ஆனால் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 85-க்கு விற்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்திய ரூபாய் மதிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் ரூ76.84 காசாக பெட்ரோல் விலை இருந்தது. கடந்த சில நாட்களாக கடும் விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது என கூறப்படுகிறது.

எச் ராஜா விவகாரம்
நாட்டில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது குறித்து பாஜக அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்களை பொதுமக்கள் மறந்தால் மட்டுமே 2019-ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் சோபிக்க முடியும் என்பதால் மத்திய பாஜக அரசு பிளான் செய்து எச் ராஜாவை விட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேச வைத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாஜக ஸ்டைல்
பொதுவாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை மறக்கடிக்க இன்னொரு பிரச்சினையை உருவாக்குவது பாஜகவின் ஸ்டைல் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மறக்கடிக்கவே சமூக விரோதி என ரஜினியை விட்டு பேச வைத்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

குளிர்காயும் பாஜக
அது போல் கமல்ஹாசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை மறக்கடிக்க மெர்சல் திரைப்பட விவகாரத்தை எச் ராஜாவும் தமிழிசையும் விடாபிடியாக பிடித்துக் கொண்டனர் என்றும் கூறியது உண்டு. எனவே ஹைகோர்ட் மற்றும் போலீஸுக்கு எதிராக எச் ராஜாவை பேசவிட்டு அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications