ஆஹா இந்த பகுத்தறிவு நம்மை புல்லரிக்க செய்கிறது... ஸ்டாலினை வாரும் எச்.ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஈபிஎஸ் பதவி காலியாக வேண்டும் என்று டீ குடித்தேன்- ஸ்டாலின்

  சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிபோக வேண்டும் என காத்திருந்து நேற்று அவருடன் டீ குடித்ததாக ஸ்டாலின் கூறியதை எச் ராஜா கிண்டலடித்துள்ளார்.

  திருவள்ளூரில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  அப்போது பேசிய ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் கருணாநிதி அதனை விரும்ப மாட்டார் என்றார்.

  ஓபிஎஸ் பதவி காலியானது

  ஓபிஎஸ் பதவி காலியானது

  மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தது குறித்து பேசிய ஸ்டாலின், ஒரு சுவாரசிய தகவலையும் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது அவருடன் டீ குடித்தேன் என்றும் அதனால் அடுத்த நாளே அவரது பதவி காலியானதாகவும் கூறினார்.

  காத்திருந்து டீ குடித்தேன்

  காத்திருந்து டீ குடித்தேன்

  ஓபிஎஸை பார்த்து சிரித்ததற்கே அவரது பதவி பறிபோனது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். நாளைக்கு இவர்கள் என்ன என்று தெரியாது என்ற அவர், அதனாலேயே 15 நிமிடம் காத்திருந்து எடப்பாடி பழனிச்சாமியுடன் டீ குடித்தேன் என்றார்.

  எச் ராஜா கருத்து

  அவரது இந்த பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ஸ்டாலின் இந்த பேச்சு குறித்து டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  பகுத்தறிவு புல்லரிக்கச் செய்கிறது

  பகுத்தறிவு புல்லரிக்கச் செய்கிறது

  ஸ்டாலின் பேச்சை மேற்கோள் காட்டியுள்ள எச் ராஜா, ஆஹ இந்த பகுத்தறிவு நம்மை புல்லரிக்கச் செய்கிறது என நக்கலடித்துள்ளார். பகுத்தறிவு பேசும் திமு கழகத்தின் செயல்தலைவர் டீ குடிப்பதை சென்டிமென்ட்டாக்கி பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  H Raja making fun of Stalin talk about Tea sentiment. DMk working president Stalin has said in a meeting that, OPS lost his CM post after having tea with him. Now i waited for 15 mins and had tea with EPS to lose his post.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற