எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த எச். ராஜா- ஓபிஎஸ்க்கு வாழ்த்து
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பான அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இன்று நேரில் சந்தித்து பேசினார்.
அதிமுகவில் அணிகள் இணைப்புக்குப் பிறகு துணைமுதல்வராக பதவியேற்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அவரது அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகியுள்ளார்

ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு அமைச்சர் பதவியா? என்று கேட்டு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக கடிதம் அளித்துவிட்டு புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இதனிடையே அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சூழ்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இன்று தலைமை செயலகம் வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்று கூறினார். புதிதாக பொறுப்பேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை சந்தித்து வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications