மானியத்துக்குத் தேவையில்லாத சூழலை நோக்கி நாடு முன்னேறுகிறது - ஹெச். ராஜா
மானியத்துக்குத் தேவையில்லாத சூழலை நோக்கி நாடு முன்னேறுகிறது என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
சென்னை: கடந்த மூன்றாண்டுகளில் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. மானியத்துக்குத் தேவையில்லாத சூழலை நோக்கி நாடு நகர்கிறது என்று சமையல் கேஸ் சிலிண்டர் மானியப் பிரச்னை குறித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் நான்கு ரூபாய் உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இது, ஏழை நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சமையல் கேஸ் சிலிண்டர் மானியத்தை தற்போது ரத்து செய்யப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

சமையல் கேஸ் சிலிண்டர்
'சமையல் எரிவாயு மானியம் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி 14.2 கிலோ மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூபாய் 1,026 என்று இருந்தது. அதுவே, இன்று 574 ரூபாய். எனவே, 2018-ம் ஆண்டு ஏப்ரலில் மானியம் இல்லாமலே உபயோகிப்பாளர்களுக்கு ரூபாய் 564க்குச் சிலிண்டர் கிடைக்கும் என்று கூறி வருகின்றனர்.
|
ஹெச். ராஜா டுவிட்டர்
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹெச். ராஜா, கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மானிய மில்லாமல் 1026 இன்று மானியமில்லா சிலிண்டர் 533 இதன் பொருள் என்ன. இன்னமும் 6-7 மாதங்களில் 500க்கும் கீழ் வந்துவிடும் என்று பதிவிட்டுள்ளார்.
|
சிலிண்டர் விலை
கடந்த மூன்று ஆண்டுகளில் சிலிண்டருக்கு ரூபாய் 460 என்ற அளவுக்கு விலை குறைந்துள்ளதுபோல், 2018ஆம் ஆண்டு ஏப்ரலுக்குள் இந்த 564 ரூபாயும் இன்னமும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, மானியத்துக்குத் தேவையில்லாத சூழலை நோக்கி நாடு நகர்ந்துகொண்டுள்ளது என்பதே உண்மை என்று ஹெச் ராஜா பதிவிட்டுள்ளார்.
|
வெட்கமில்லையா
ராஜாவின் பதிவிற்கு பதிலிட்டுள்ள ஒருவர், இப்படி வெட்கமில்லாமல் பேச பாஜகவினரால் குறிப்பாக ஹெச். ராஜாவினால் மட்டும்தான் முடியும். எதன் அடிப்படையில் இதை சொல்கிறார் எலும்பு நிபுனி? என்று ஒருவர் பதிவிட்டார்.
|
அறிவோடு பதிவிடவும்
அதற்கு ஹெச். ராஜா, கோபப்படாமல் சற்று சிந்தித்து அறிவோடு பதிவிடவும் என்று கூறியுள்ளார்.
-
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications