நண்டு கொழுத்தால் வலையில் தங்காது... எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோவை போட்டு எச். ராஜா சீண்டல்!
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் திருப்பதியில் காணிக்கை செலுத்துவது குறித்து பேசிய வீடியோவை போட்டு எச். ராஜா கிறித்தவ மதமாற்றும சக்திகளின் கோரமுகம் இதோ என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் திருப்பதியில் காணிக்கை செலுத்துவது குறித்து பேசிய வீடியோ பதிவை போட்டு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கிறித்தவ மதமாற்றும சக்திகளின் கோரமுகம் இதோ என்று பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மெர்சல் பட விவகாரத்தில் நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று போட்டு அவரின் உண்மையான அடையாளம் இது தான் என்று கருத்து பதிவிட்டிருந்தார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. இதற்கு நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் பதிலடி தரும் விதமாக மதத்தை வைத்து ஒருவரை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைத் தனமானது என்று கூறி இருந்தார்.
ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நடிகர் விஜய் சிறந்த மனிதராகவே இருக்கிறார் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய்யும் மெர்சல் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலும் கூட ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டு எச். ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
|
எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு
இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவை எச். ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எஸ்.ஏ.சந்திரசேகர் உண்டியலில் காசு போட்டால் பாஸ் ஆகிவிடலாம் என்றால் யாருமே பள்ளிக்குச் செல்ல வேண்டாமே.

நல்லது செய்ய வேண்டும்
உண்டியலில் காசு போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். உழைக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நல்லதையே பேச வேண்டும். மனதில் எதையும் மறைத்து வைத்து பேசாதீர்கள் என்றும் அவர் அதில் குறிப்பிடுகிறார்.

கிறித்தவர்களின் கோரமுகம்
இந்த வீடியோ பதிவை போட்டு தான் எச். ராஜா நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இன்று தனக்கு ஜாதி இல்லை மதம் இல்லை நாங்கள் தமிழர்கள் மனிதர்கள் என்கிற கிறித்தவ மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ.

இந்துவாக இணைவோம்
நாம் ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாறப் போகிறோமா?ரசிகர் மன்றம் கலைப்போம் இந்துவாக இணைவோம் என்று எச். ராஜா கருத்து பதிவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications