ஒழுக்கமே இல்லாத வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை என கருதுபவர் கமல்- அடங்காத எச் ராஜா
சென்னை: ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை உயர்ந்த வாழ்க்கை என கருதுபவர் நடிகர் கமல் ஹாசன் என்று மிகவும் கீழ்த்தரமாக இறங்கி பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.
தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று நடிகர் கமல் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கமலை கண்டபடி விமர்சித்தனர்.
அமைச்சர் ஜெயகுமாரோ , கமல் அரசியலுக்கு வரட்டும் அப்போதுதான் தெரியும் என்று வெளிப்படையாக சவால் விட்டார். இந்நிலையில் நேற்று இரவு கமல், கவிதை வடிவில் தான் அரசியலுக்கு வருவது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எச். ராஜா விமர்சனம்
இந்த டுவீட் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. கமல் ஒரு முதுகெலும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.

கமல் அறிக்கை
இதைத் தொடர்ந்து இன்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தபோதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், இது ஜெயக்குமாருக்கும், எச் ராஜாவுக்கும் தெரியாது என்றும் பதிவிட்டுள்ளார்.

எச். ராஜா பதில்
மேலும் எச்.ராஜா முதுகெலும்பு வல்லுனர் என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு பாஜக தலைவர் எச்.ராஜா பதிலளிக்கையில், அரசியலுக்கு வர கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு.

கமல் கோழை
முடிவெடுத்தால் முதல்வர் என்ற வரிக்குதான் நான் எதிர்த்தேன். பிரச்சனை என வரும்போது ஓடிப் போய்விடுவார் கமல். இன்னும் சொல்ல போனால் முதுகெலும்பு இல்லாத கோழை அவர்.

இந்து விரோதி
கமல் ஒரு இந்து விரோதி என்பதால் எதிர்க்கிறேன். வக்கிரமாக பேசக் கூடியவர். மேலும் ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை உயர்ந்த வாழ்க்கை என்று கருதுபவர். மொத்தத்தில் தலைவருக்கான தகுதியே இல்லாதவர் என்றார் எச். ராஜா.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications