பெரியார் சிலையை அகற்றுவோம் என எச் ராஜா பேசியது காட்டுமிராண்டித்தனம்: ரஜினி கருத்து
பெரியார் சிலையை அகற்றுவோம் என்று எச் ராஜா பேசியது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பெரியார் சிலையை அகற்றுவோம் என்று எச் ராஜா தனது பேஸ்புக்கில் பதிவு செய்தது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.
திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் அங்குள்ள லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. இதுபோல் தமிழகத்திலும் திராவிட கட்சிகளின் ஆட்சிகள் முடிவுக்கு வரும்.
அப்போது தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச் ராஜாவின் பேஸ்புக் கணக்கிலிருந்து பதிவு வெளியானது. இதற்கு தமிழக திராவிட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

கைது செய்ய வேண்டும்
மேலும் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் போராட்டம்
தமிழகம் முழுவதும் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நான் பதிவிடவில்லை
பெரியார் சிலை உடைப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட கருத்து என்னுடையது அல்ல. என் அனுமதியின்றி எனது அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று எச் ராஜா விளக்கம் அளித்தார்.

காட்டுமிராண்டித்தனம்
இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அவரது வருத்தத்தை என்னால் ஏற்க முடியாது என்றார். இந்நிலையில் ராஜாவின் கருத்து குறித்து ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று சொன்னதும், பெரியார் சிலையை உடைத்ததும் காட்டுமிராட்டித்தணமானது என்றார் ரஜினி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications