சாதாரண சினிமா வசனத்துக்கே வோட்டர் ஐடி வரை தோண்டியெடுத்த எச்.ராஜா... இதுவா அரசியல்?
சாதாரண சினிமா வசனத்துக்கே வோட்டர் ஐடி வரை தோண்டி எடுத்து மதச்சாயம் பூசும் ராஜா பேசுவதுதான் அரசியலா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: சாதாரண சினிமா வசனத்துக்காக நடிகர் விஜய்யின் வோட்டர் ஐடி, பழைய லெட்டர் பேடு என தோண்டியெடுத்த பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் செயல்பாட்டை நெட்டிசன்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொதுவாக எந்த துறையைச் சேர்ந்தவர்களானாலும் தாங்கள் சார்ந்த மத அடையாளத்தை தமது பெர்சனல் விஷயமாக வைத்துக் கொண்டுதான் செயல்படுகின்றனர். நடிகர்கள், படைப்பாளிகள் எந்த மதத்தைச் சார்ந்து இருந்தாலும் அதை நடிப்பிலும் படைப்புகளிலும் காட்டுவதும் இல்லை.
அண்மைக்காலமாக தமிழக பாஜகவினர் தங்களை விமர்சிப்பவர்கள் அனைவரையும் மத கண்ணாடி கொண்டே விமர்சித்து வருகிறது. நாடறிந்த இடதுசாரி தலைவர் தா. பாண்டியனை தாமஸ் பாண்டியன் என அழைத்தார் தமிழிசை சவுந்தரராஜன். அதேபோல் திருமுருகனை டேனியல் திருமுருகன் என்றனர். சீமானை சைமன் சீமான் என்றனர்.

சாதித்ததாக நினைப்பு
இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய், மத்திய அரசின் ஜிஎஸ்டியை விமர்சித்த காரணத்தாலேயே, ஜோசப் விஜய் என சாடப்படுகிறார். இதன் உச்சமாக பாஜக தேசிய செயலர் எச். ராஜாவோ நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதற்கான ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, பழைய லெட்டர் போடு ஆகியவற்றை ட்விட்டர் பக்கத்தில் போட்டு ஏதோ சாதித்தது போல காட்டிக் கொண்டிருக்கிறார்.

கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்
ஆனால் எச். ராஜாவின் இந்த போக்கு படுகேவலமானது என்பதை அவரது ட்விட்டர் பக்கத்திலேயே கழுவி ஊற்றியிருக்கிறார்கள் நெட்டிசன்கள். நடிகர் விஜய், தம்மை ஜோசப் விஜய் என்பதை மறைத்தது கிடையாது. மத்திய அரசை விமர்சித்த உடனேயே மாற்று மதத்தவர் என முத்திரை குத்தி அரசியல் ஆதாயம் தேடுவது மிக கேவலமான ஒன்று.

மதச்சார்பின்னைக்கு எதிரானது
ஒரு சில நிமிடங்களே வரும் வசனத்துக்காக இவ்வளவு பெரிய மதவிரோதத்தை எச். ராஜா போன்ற படித்த, ஒரு கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் வெளிப்படுத்துவது என்பது படுகேவலமானது. இந்த மண்ணில் இருக்கும் மதச்சார்பின்மையை சாகடிக்கும் விஷச் செயல் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமே இருக்க முடியாது.

எதிர்காலம் அம்போ
ஏற்கனவே தமிழர் விரோத போக்குகளால் தமிழ் மண்ணில் இருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது பாஜக. அத்துடன் தமிழர் என்றுமே ஏற்காத மதத்தின் பெயரிலான இத்தகைய பிரிவினை என்பது தமிழக பாஜக தலைவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒட்டுமொத்தமாக உலை வைத்துவிடும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications