செல்லாது, செல்லாது.. சாரணியர் இயக்க தலைவர் தேர்தலுக்கு பிறகு எச்.ராஜா ஆவேசம்
சென்னை: தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ஆம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குனர் பி.மணியும் போட்டியிடுகின்றனர்.

அதன்படி இன்று காலை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தொடங்கவிருந்த தேர்தல் முன்கூட்டியே 10 மணிக்கு தொடங்கியது. மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தது.
Recommended Video

தேர்தல் நடைபெறும்போதே தேர்தலை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு அனுப்பியதாக கூறி ஒரு கடிதத்தை வேட்பாளர் எச்.ராஜா தேர்தல் பொறுப்பாளர்களிடம் கொடுத்தார். அதை ஏற்க மறுத்து தேர்தல் நடைபெற்றது. இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி பிறகு அமைதி நிலை திரும்பியது.
தேர்தல் முடிந்த பிறகு நிருபர்களிடம பேசிய எச்.ராஜா, 23ம் தேதி நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்தியுள்ளனர். வேறு சில தேர்வுகள் காரணமாக பலரும் இன்று வாக்களிக்க வர முடியாது என்பதை அறிந்தே இவ்வாறு செய்துள்ளனர். எனவே தேர்தல் செல்லாது என கூறினோம். அதை ஏற்க மறுத்து தேர்தல் நடந்துள்ளது. தேசிய சாரணியர் அமைப்பு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும். எனவே நான் கோர்ட்டுக்கு செல்ல தேவையில்லை. இந்த தேர்தல் செல்லாது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications