அனிதா மரணம் தற்கொலையா என விசாரிக்க வேண்டும்... சொல்வது யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிதாவின் மரணம் தற்கொலையா இல்லை கொலையா என்பதை முதலில் போலீஸார் விசாரிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

 H.Raja says that whether Anitha's death is suicide?

இந்நிலையில் அனிதாவின் இறப்பு குறித்து பாஜக தேசிய செயலர் எச். ராஜா கூறுகையில், அனிதாவின் மரணம் தற்கொலையா என விசாரணை நடத்த வேண்டும். நீட்-க்கு ஆதரவான மாணவனின் தாய் தற்கொலை செய்து கொண்டபோது இவர்களெல்லாம் எங்கு சென்றிருந்தனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அனிதாவின் மரணம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எச்.ராஜா தனது டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பிரதமரை இழிவாகப்பேசும் வைகோ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு மீற முடியாது. கள்ளத் தோனியில இலங்கை போகும் விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+