ராம்குமாருக்குப் பின்னால் வேறு யாரோ இருக்காங்க.. சந்தேகப்படும் ராஜா!
திருச்சி: ராம்குமார் மட்டும்தான் கொலைக்குக் காரணம் என்று போலீஸ் கூறுவதை நம்ப முடியவில்லை. அவருக்குப் பின்னணியில் யாரேனும் இருக்கலாம் என நான் சந்தேகப்படுகிறேன் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் சுவாதி கொலை தொடர்பாக குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். போலீஸாரின் துரித நடவடிக்கையை பாராட்டுகிறோம்.

ஆனால் ராம்குமார் கைது செய்யப்பட்ட விதம், கைது செய்யப்பட்ட இடம், அவருக்கு மட்டுமே இதில் தொடர்பு உள்ளது என்று போலீஸார் கூறுவதை என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை. அவருக்குப் பின்னால் வேறு யாரேனும் இருக்க வேண்டும் என நான் சந்தேகப்படுகிறேன்.
இதுகுறித்து மிக விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளி வரும். ராம்குமாரை யாரேனும் தூண்டி கருவியாக பயன்படுத்தினரா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும், அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
சுவாதி கொலை வழக்கில் இன்னும் தீர்க்கப்படாத பல மர்மங்கள் உள்ளன. அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையில் தனது காதலை சுவாதி நிராகரித்ததால்தான் ராம்குமார் கொலை செய்தாரா அல்லது வேறு யாருக்காவாவது அவர் அதைச் செய்தாரா என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
ஊடகங்களிலும் கூட ராம்குமார் கைது தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டியது காவல்துறைதான். அதை அவர்கள் செய்ய வேண்டும் என்றார் ராஜா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications