கமல் தீவிரவாதிகளின் ஆதரவாளராகிவிட்டார்.. தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்: எச் ராஜா விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தீவிரவாதிகளின் ஆதரவாளர் ஆகிவிட்டார் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இந்து தீவிரவாதம் இல்லை என்று இந்துக்களே கூற முடியாது என நடிகர் கமல்ஹாசன், வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரைக்கு பாஜக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

H Raja slams Actor kamal haasan on the hindus issue

பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார் நடிகர் கமல்ஹாசனுக்கு மனநிலை சரியில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா நடிகர் கமல்ஹாசனை தனது டிவிட்டர் பக்கத்தில் விளாசியுள்ளார்.

அதாவது கமல் எப்போதுமே இந்து விரோதி என்ற மாறிவிட்டது என கூறியுள்ளார். தற்போது கமல் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்ற நிலைக்கு புரமோட் ஆகியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

விஸ்வரூபம் பிரச்சனையின் போது முஸ்லிம் அமைப்புகள் கமலுக்கு இன்னும் 20 வருஷத்துக்கு பயம் போகாது என்று கூறியது சரிதான் போல என்றும் எச் ராஜா தெரிவித்தார். இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம் என்றும் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
H Raja slams Actor kamal haasan on the hindus issue. He said Actor Kamal has promoted from the stage of Hindus Enemy to Terrorrists supporters.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற