இந்து கோயில்ல எப்படி வழிபாடு நடத்தினா உங்களுக்கு என்ன.. தி.க., திமுகவுக்கு எச். ராஜா சுளீர் கேள்வி
திமுக, திகவை எச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்
சென்னை: "ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் தான் நீதிக்கட்சியும் திக, திமுகவும்.. இந்து கோயில்ல என்ன மாதிரியான வழிபாடு நடத்தினா உங்களுக்கு என்னன்னு கேக்கிறேன் நான்? என்று காட்டமான கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார் எச்.ராஜா!!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் என்ஆர்சிக்கு எதிராகவும் நேற்று பெங்களூருவில் போராட்டம் நடந்தது. இதில், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிச் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசியும் பங்கேற்றார்... ஓவைசி பேசுவதற்காக மேடையேறினார்.
திடீரென ஒரு இளம் பெண் மைக்கை பிடித்து பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்டார்... இதனால் அதிர்ச்சியுற்ற ஓவைசி பெண்ணிடம் மைக்கை பிடுங்க பார்த்தும் முடியவில்லை.. அப்போதும் பாகிஸ்தான் வாழ்க் என்று மைக்கில் கோஷம் போட்டார். பிறகு அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த அங்கிருந்தோர் ஓடிவந்தபோது, இந்தியா வாழ்க என்றார்.

இந்தியா
அவரிடம் நடத்திய விசாரணையில் பெயர் அதுல்யா, சிஏஏ எதிர்ப்பாளர் என தெரியவந்தது. இப்போது அவர் காவலில் உள்ளார்... இந்த பெண்ணை ஏன் இங்கே கூப்பிட்டிங்க, தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேனே.. நாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள், எப்பவுமே பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டோம் என்று ஓவைசி மேடையிலேயே இதை பகிரங்கமாக சொன்னார். எனினும், இந்த சம்பவத்திற்காக கர்நாடகா பாஜக, ஒவைசியை கடுமையாக விமர்சித்தது.
|
விமர்சனம்
இந்த சம்பவத்தின் வீடியோவைதான் எச்.ராஜாவும் எடுத்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்... "இந்த #CAA எதிர்ப்பு போராட்டமே தேசவிரோதமானதுதான் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு' என்று தெரிவித்துள்ளார். இதேபோல மற்றொரு பதிவில், "இந்த நாட்டிலுள்ள நம்முடைய மூதாதையர்கள் அனைவரையுமே கேவலபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் தான் நீதிக்கட்சியும் திக,திமுகவும்" என்று காட்டமாக சொல்லி உள்ளார்.

சுருக்கம்
அத்துடன் தான் பேசிய வீடியோ பதிவையும் போட்டுள்ளார். அதில் உள்ள சுருக்கம் இதுதான்: "இந்த நாட்டின் மூதாதையர்கள் அனைவரையுமே கேவலப்படுத்துவதற்காக ஆங்கில கிறிஸ்தவ ஏகாதிபத்தியத்தின கைக்கூலிகள்தான் நீதிக்கட்சியும், திக, திமுகவும்.. இந்து கோயில்ல என்ன மாதிரியான வழிபாடு நடத்தினா உங்களுக்கு என்னன்னு கேக்கிறேன்? இந்த நாட்டில் மதம் என்பது வேறு, மொழிகள் என்பது வேறு... ஆனால் காஷ்மீர் முதல் கன்னியகுமரி வரை இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்..

சீமான்
இந்துக்கள் தேசம் இது.. நாம் அதை பராமரிக்க வேண்டும்.. ஆனால் அழிப்பதற்காக தீயசக்திகள் மொழி வெறியை தூண்டி, இந்து மதத்தினில் பிரச்சனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. வைரமுத்து, டேவிட் மணியரசன், ஜெயினுலாபுதீன், சீமான் போன்றவர்கள் இதைதான் செய்கிறார்கள்.. உங்களுக்கு என்னய்யா வேலைன்னு கேட்கிறேன்.. நாம இந்துக்கள் தெளிவா இருப்போம்.

சனாதனம்
இந்த நாட்டில தேவாரம், திருவாசகம், நாலாயிரம், திவ்வியபிரபந்தம், கம்பராமாயணம் எல்லாம் இந்த ஈவெரா சொல்லிதான் இயற்றினாங்களா? சனாதன இந்து தர்மத்தின் தர்மாந்திர காமமோட்சத்தின் அடிப்படையில் அல்லவா திருக்குறளானது வடிவமைக்கப்பட்டுள்ளது.. எல்லாம் ஒன்னுதான்.. ஆனால் மொழி வேறு, ஆனால் சனாதனம் இந்து தர்மம்தான்.. தமிழகத்தில் ஆங்கில கிறிஸ்தவ ஏகாதிபத்தியத்தின் அடிமைகள், கைக்கூலிகளை சமூக தளத்தில் இருந்தே நீக்க வேண்டும" என்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications