மம்தா வர்றாங்க... சந்திரசேகரராவ் வர்றாங்க... வாழ்க 3வது அணி - எச் ராஜா
சந்திரசேகரராவின் மூன்றாவது அணி முயற்சிக்கு பாஜகவின் எச். ராஜா கிண்டலடித்துள்ளார். தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி ஸ்டாலினிடம் பேசி மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு கேட்டுள்ளார். மூன்றாவது அணிக்கு கிண்டலாக வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்குவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென அழைப்பு விடுத்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
இதற்கு முதல் ஆதரவு மம்தா பானர்ஜியிடம் இருந்து வந்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது.
|
வாழ்த்து கூறிய எச் ராஜா
இது குறித்து எச். ராஜா தனது ட்விட்டர் பதிவில், மம்தா ஸ்டாலினிடம் பேசினார்சந்திரசேகர் ராவ் சென்னை வருகிறார். பாஜக, காங் எதிராக 3 வது அணி. வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் திமுகவிற்கு டிஎம்சி, டிஆர்எஸ் ஓட்டு பெரிய பலம். மேற்கு வங்கத்தில் திமுக, டிஆர்எஸ்க்கு வலிமை அதிகம். டிஆர்எஸ் க்கு திமுக டிஎம்சி அசுர பலம் சேர்க்கும். இதற்கு பெயர் நாங்கள் தனித்து நிற்போம். வாழ்க 3 வந்து அணி என்று கூறியுள்ளார்.

மமதா பானர்ஜி பேச்சு
இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியும் தற்போது 3வது அணியை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டதாக தெரிகிறது. மம்தா பானர்ஜி இது தொடர்பாக இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அணி சேர்க்கும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டதையே மம்தா-ஸ்டாலின் பேச்சு காட்டுகிறது.

3வது அணி முயற்சி
ஸ்டாலின் தற்போது தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து போராட்டங்களை நடத்தி வருவது குறித்து தெரியப்படுத்திவிட்டு, தங்கள் கருத்தை பரிசீலிப்பதாக கூறியதாக தெரிகிறது. மம்தா பானர்ஜி முயற்சி எடுக்கிறார் என்றால், அந்த அணியில் பாஜக, காங்கிரசுக்கு மட்டுமல்ல... இடதுசாரிகளுக்கும் இடமில்லை

காங்கிரஸ் கூட்டணியில் திமுக
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, திமுக.வுடன் போராட்டங்களில் மட்டும் இணைந்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தெட்ட திமுக கூட்டணியில் இணையும் மனநிலைக்கு வந்துவிட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் இன்னமும் திமுகவை சில இடங்களில் விமர்சிக்கவும் தவறுவதில்லை.
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சி இல்லாத மூன்றாவது அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் சந்திரசேகர ராவ்.

3வது அணிக்கு வைகோ ஆதரவு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஆண்டே காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி பற்றி பேசியுள்ளார்.
இந்தியாவில் காங்கிரஸ், பாஜக இல்லாத கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டுமென வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி என்னிடம் கூறினார். அதுதான் என்னுடைய எண்ணமும் கூட என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூறினார். மமதா பானர்ஜியை ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளார் வைகோ, திமுக உடனும் ஆதரவு நிலையில் இருப்பதால் 3வது அணியில் அவரும் இணைவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் 3வது அணியை கிண்டலாக வாழ்த்தியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications