For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ராஜா ஹரிஹர ஷர்மாவா... வோட்டர் ஐடியை பப்ளிஷ் செய்த எச்.ராஜா..!

தன்னுடைய பெயர் பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும் தன்னுடைய உண்மையான பெயர் என்ன என்பதற்கான வாக்காளர் அடையாள அட்டையை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    H.ராஜா, ஹரிஹர ஷர்மாவா ?

    சென்னை : தன்னுடைய பெயரை ராஜா ஹரிஹர ஷர்மா என்று அவதூறு பரப்பப்புவோர்களுக்கு பதிலடியாக வாக்காளர் அடையாள அட்டை ஆதாரத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. ஆனால் அங்கும் நெட்டிசன்கள் பூந்து விளையாடி அவரை கடுப்பேத்தி வருகின்றனர்.

    மெர்சல் விவகாரத்தில் நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டதால் பல முனை தாக்குதலுக்கு ஆளானார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. ஆனால் அந்த விவகாரத்திற்கு அதோடு முற்றுப்புள்ளி வைக்காமல் விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை டுவிட்டரில் பதிவிட்டு நான் சொன்னதில் தவறில்லை அவர் ஜோசப் விஜய் தான் இதோ ஆதாரம் என்பது போல உண்மை எப்போதுமே கசக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

    ஒருவழியாக மெர்சல் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் எச். ராஜவின் முழுப்பெயர் ராஜா ஹரிஹர ஷர்மா என்று புது பூதத்தை சமக வலைதளங்கள் குறிப்பிட்டனர். ஷர்மாவிற்கு தமிழ்நாட்டில் என்ன வேலை தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றும் நெட்டிசன்கள் விளாசித் தள்ளினர்.

    பாருங்க ஆதாரத்த

    இந்நிலையில் எச். ராஜா இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிட்டுள்ளார். ஏதோ தெரியாத சிலர் ஒருவரின் பெயரை தவறாக பரப்பலாம், ஆனால் ஊடகங்களே இதைச் செய்வதை ஏற்க முடியாது என்று ராஜா அந்த டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    அசராமல் அடிக்கும் நெட்டிசன்கள்

    அசராமல் அடிக்கும் நெட்டிசன்கள்

    தன் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லும் விதமாக எச்.ராஜா இந்த வாக்காளர் அடையாள அட்டை ஆதாரத்தை வெளியிட்டார். ஆனால் அங்கும் நெட்டிசன்கள் பதில் டுவீட்டில் பூந்து விளையாடியுள்ளனர்.

    இருந்துச்சு இப்ப இல்லை

    எச்.ராஜாவின் டுவீட்டிற்கு பதில் டுவீட் போட்டுள்ள இவர். தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் அப்படித் தான் இருந்தது தூக்கிவிட்டார்கள் என்று இரண்டு இமேஜ்களை போட்டுள்ளார்.

    தந்தை என்பதற்குப் பதில் உறவினரா?

    வாக்காளர் அடையாள அட்டையில் தந்தையின் பெயர் என்பதற்குப் பதிலாக உறவின் பெயர் என்று இருக்கிறது. அதை வைத்தும் சிலர் நக்கலடிக்கத் தொடங்கியுள்ளனர். ஹரிஹரன் உங்கள் தந்தையில்லையா உறவினரா என்று கேட்டு அவரை நோகடிக்கின்றனர்.

    English summary
    H.Raja this time released his voter id card for reference of his name and that too trolled by Netizens.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X