For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த செலவில் 'சூனியம்' வைத்துக்கொண்ட எச்.ராஜா.. நெட்டிசன்களிடம் சிக்கினார்

சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது எடுத்த படம் என்று எச். ராஜா போட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்- வீடியோ

    சென்னை : சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது எடுத்த படம் என்று ஆணும் பெண்ணும் உதட்டோடு உதடாக வைத்து முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

    சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல் மகா கணபதிம் என்ற சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத போக்கு தொடர்ந்து நடந்து வருவது தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே எச்.ராஜா சார்பில் நடத்தப்பட்ட தமிழ்- சமஸ்கிருதம் நூல் வெளியீட்டு விழாவின் போது ஆளுநர், காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

    விஜயேந்திரரால் எழுந்த தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

    விஜயேந்திரரால் எழுந்த தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

    விஜயேந்திரர் மன்னிப்பு கேட்கக் கோரியும் சங்கர மடத்தை முற்றுகையிட்டும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. விஜயேந்திரருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது, இதில் விளக்கம் அளிக்க விஜயேந்திரர் மனு அளித்துள்ளார்.

    ஐஐடி நிகழ்ச்சியில்

    ஐஐடி நிகழ்ச்சியில்

    தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்த விஷயம் அடங்குவதற்குள்ளாகவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டது ஏற்கனவே இருந்த பிரச்னையை தீவிரப்படுத்தியது.

    முற்றுகைப் போராட்டம்

    முற்றுகைப் போராட்டம்

    தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படாததற்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்பட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அமைப்பினர் ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களையும் நடத்தினர்.

    எச். ராஜா ட்விட்டால் சர்ச்சை

    ஐஐடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாதது குறித்து பாஜகவைச் சேர்ந்த யாரும் விளக்கம் தரவில்லை. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் புயலை கிளப்பியுள்ளது.

    வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

    வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

    ஆணும் பெண்ணும் உதட்டோடு உதடாக முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை எச்.ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு நின்று விடாமல் வைகோ, ஸ்டாலின் கவனத்திற்கு: சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது என்றும் குறிப்பிட்டுள்ளார். தப்பான புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எச். ராஜா பகிர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    English summary
    BJP national secretary H.Raja tweeted wrong photo with the caption of note Vaiko and Stalin this is the way Tamil culture growing in IIT, the photo posing young couple kissing each other
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X