தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்... கருணாநிதி வீடியோவை காட்டி குசும்பு டுவீட் போட்ட எச்.ராஜா
தமிழ்த் தாய் வாழ்த்துக்கு கருணாநிதியும் எழுந்து நிற்காத வீடியாவை தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டு எச். ராஜா வம்பிழுத்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததாக விஜயேந்திரருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதியும் இதுபோல் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்தார் என்றும் தேசிய கீதத்துக்கு மட்டும் மரியாதை தந்தார் என்றும் சொல்லாமல் கூறும் வீடியோவை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

தேசிய கீதத்துக்கு மட்டும்...
ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்திருக்கவில்லை என்றும் தமிழ் மொழியை அவமதித்துவிட்டு தேசிய கீதத்துக்கு மட்டும் அவர் எழுந்து நின்றார் என்றும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
|
செம்மொழி மாநாட்டு வீடியோ
இந்நிலையில் எச்.ராஜா வழக்கம் போல் ஒரு வீடியோவை மெனக்கட்டு தேடி எடுத்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக இருந்த போது நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டு வீடியோவாகும்.

சுர்ஜித் சிங் பர்னாலா
இந்த விழாவில் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வராக இருந்த கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா தொடங்கியபோது தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

கருணாநிதி எழவில்லை
அப்போது ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் எழுந்து நிற்கும் போது கருணாநிதி மட்டும் எழவில்லை என்று கூறும் வீடியோ நோ கமென்ட்ஸ் என்று குறிப்பிட்டு எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதேபோல் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மட்டும் கருணாநிதி எழுந்து நின்றதாகவும் அவர் மற்றொரு போட்டோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விஜய்யின் வாக்காளர் அட்டை
இதேபோல் மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி குறித்த வசனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா , ஜோசப் விஜய்யின் மோடிக்கு எதிரான நிலைப்பாடே இந்த ஜிஎஸ்டி வசனம் என்று கூறியிருந்த எச்.ராஜா, நடிகர் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை தேடி அதில் ஜோசஃப் விஜய் என்று அவரது பெயர் இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications