இளையராஜா ஏற்கனவே ஐயர்தான்... டிவீட் போட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் எச். ராஜா!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஐயராக மாற நினைப்பதாக பிரபல இயக்குனர் பாரதிராஜா நேற்று விமர்சித்திருந்தார். இதற்கு எச். ராஜா ட்வீட்ட விடுவார்களா நெட்டிசன்ஸ் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டனர்.
Recommended Video

சென்னை: இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான் என்று எச். ராஜா ட்வீட்டரில் பதிவிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எச். ராஜாவின் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை கண்டிப்பாக வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விபூஷன் விருது அறிவித்தது. அவர் தலித் என்பதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது போல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான் ஆங்கில பத்திரிக்கை அவருடைய ஜாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக இளையராஜாவை விமர்சித்திருந்தார் பாரதிராஜா. இந்த கருத்துக்கு எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.
|
இளையராஜா ஐயர்தான்
ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான். அவர் புதிதாக முயற்சிப்பதாக கூறுவது புரிதல் இன்மையே என்று பதிவிட்டுள்ளார் எச் ராஜா.
|
எம்பூட்டு அறிவு
இம்புட்டு அறிவ வச்சிகிட்டா நீ நம்மூர்ல இருக்க என்று கேட்கிறார் இந்த வலைஞர்.
— Soundararajan V (@RajanVSoundar) January 29, 2018 |
அடப்பாவமே
ராஜாவின் கருத்துக்கு தலையில் அடித்துக்கொள்வதை தவிர வேறென்ன சொல்ல என்று சொல்லாமல் சொல்கிறார் ஒரு நெட்டிசன்.
|
தமிழிசை ஐயர் ட்வீட்
கமல் ஐயரும் ரஜினி ஐயரும் கருணாநிதி ஐயரைப் பார்க்கப் போனபோது, அவர்களை கனிமொழி ஐயரும் ஸ்டாலின் ஐயரும் வரவேற்றார்கள். அதைப்பற்றி தமிழிசை ஐயர் ட்வீட் செய்தார்னுதானே சொல்ல வர்றீங்க? நல்லாப் புரியுது!
— Sangeetha (@Sangeet76127690) January 29, 2018 |
அந்த புத்திசாலி யாருய்யா?
அட இந்த கருத்தை சொன்ன புத்திசாலி யாருய்யா என்று கேட்பது போல விஜயகாந்த் படத்தை போட்டு கிண்டலடித்துள்ளார் ஒரு வலைஞர். இன்னும் என்னென்ன பதில் வரப்போகுதோ. எச். ராஜா தினசரியும் இப்படி வாலண்டியராக வந்து வாங்கிக் கட்டிக்கொள்வது ஏனோ?.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications