For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வீடியோ வெளியீடு விவகாரம்.. டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்!

ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோவை வெளியிட்டது தொடர்பாக டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எச் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

காரைக்குடி: ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோவை வெளியிட்டது தொடர்பாக டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எச் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போர் வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆர்கே நகருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு தினகரன் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இன்று இடைத்தேர்தல்

இன்று இடைத்தேர்தல்

இந்நிலையில் ஆர்கே நகருக்கு இரண்டாவது முறையாக ஓராண்டுக்கு பிறகு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் தடை

தேர்தல் ஆணையம் தடை

ஆர்கே நகரில் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதிய்ல 48 மணி நேர தடை விதித்தது தேர்தல் ஆணையம்.

சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த நிலையில் தினகரன் தரப்பைச் சேர்ந்த வெற்றிவேல் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெறும் வீடியோவை வெளியிட்டார். இதுபெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தினகரனை தகுதிநீக்கம்..

தினகரனை தகுதிநீக்கம்..

இந்த வீடியோ வாக்காளர்கள் மத்தியில் பிரதிபலிக்கும் என்பதால் அதனை ஒளிபரப்பு செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இந்நிலையில் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

எச் ராஜா வலியுறுத்தல்

எச் ராஜா வலியுறுத்தல்

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டதை பிரச்சாரமாக கருதி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

English summary
H Raja urging to disqualify TTV Dinakaran in the RK Nagar by poll. Dinakaran supporter Vetrivel released Jayalalitha treatment video yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X