ஹைகோர்ட்டாவது... நீதிமன்றங்களை மோசமான வார்த்தையில் திட்டிய எச்.ராஜா.. அதிர்ச்சி வீடியோ!
நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
சென்னை: நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
தற்போது இந்தியா முழுக்க பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்து வருகிறது. பொதுவாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடந்து முடிவதே வழக்கம்.
ஆனால் இந்த முறை திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சில இடங்களில் சிறிய சிறிய கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிய வீடியோ வைரலாகி உள்ளது.

என்ன பிரச்சனை
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட கூடாது என்று பெரிய பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தமிழக போலீசும் நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜக அனுமதி கேட்டு இருக்கிறது. மேடை அமைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை
ஆனால் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைப்பது சரியாக இருக்காது என்று போலீஸ் மறுத்துள்ளது. இது கலவரத்திற்கு வழிவகுக்கும் என்று போலீஸ் அந்த இடத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இது பாஜகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சிறப்பு விருந்தினர்
இந்த நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் கடைசியில் அனுமதி மறுக்கப்பட்டதால், எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார். போலீசையும், நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். நீதிமன்றம் குறித்து அவர் கொச்சையாக பேசியது எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது.

வைரல்
இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பலர் இந்த வீடியோவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். எப்படி ஒரு அரசியல் தலைவர் நீதிமன்றத்தை தகாத வார்த்தைகளில் பேசலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
சில்லுண்டிகளை வச்சிக்கிட்டு? தவெக விஜய் அரசை துவம்சம் செய்த எச்.ராஜா.. அண்ணாமலைக்கும் விழுந்த செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications