பொது சிவில் சட்டத்தை குஷ்பு ஆதரிப்பதை வரவேற்கிறேன் - ஹெச்.ராஜா
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்றுள்ளார்.
மதுரை: பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு ஆதரிப்பதை வரவேற்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சீனிவாசனை பத்திரிகையாளர்களுக்கு ஹெச்.ராஜா அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: சிமி போன்ற பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை கண்டிக்காமல், அந்தத் தீவிரவாதிகளை என்-கவுண்டர் செய்த விசயத்தை பெரிதுபடுத்த நினைக்கும் இவர்கள்தான் தேசவிரோத சக்திகள்.

இது போன்ற அமைப்புகளுக்குப் பயந்து அல்லது கையூட்டு வாங்கிக் கொண்டே இவ்வாறு செயல்படுகிறார்கள் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். பொதுசிவில் சட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியாவிலுள்ள அனைத்து மதத்தினரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக இதற்கு முயற்சி எடுக்கிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குஷ்பு இதனை வரவேற்றிருப்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியே. மதச்சார்பின்மையை பற்றி பேசுகிறவர்கள், ஒரு மதத்திற்கென்று தனியாக சட்டம் இருப்பதை ஏன் கண்டிக்க மறுக்கின்றனர்?
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து, வருகின்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும். வருகின்ற பொங்கல் ஜல்லிக்கட்டு பொங்கலாக தமிழர்களுக்கு கண்டிப்பாக அமையும் என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications