கருணாநிதியை எதிர்த்து நின்ற எச்.வி. ஹண்டே.. இன்று அவருக்கே சிகிச்சை மருத்துவர் .. யார் இவர்?
சட்டமன்ற தேர்தல்களில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட எச்.வி. ஹண்டே கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
சென்னை: சட்டமன்ற தேர்தல்களில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட எச்.வி. ஹண்டே கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது இரத்த அழுத்தம் கொஞ்சம் குணமாகி உள்ளது.
ஆனால் சிறுநீரக தொற்று இன்னும் குணமாகவில்லை. சரியாக மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.

மருத்துவர் எச்.வி. ஹண்டே
கருணாநிதிக்கு மொத்தம் 8 மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளிக்கிறார்கள். அவருக்கு சிகிச்சை அளிக்க பிரபல மருத்துவர் எச்.வி. ஹண்டே காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்றிலிருந்து அவர் சிகிச்சை அளித்து வருகிறார். அதேபோல் கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அதிமுக கட்சியை சேர்ந்தவர்
எச்.வி. ஹண்டே மருத்துவர் மட்டுமல்ல அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 1971ல் சுதந்திரா கட்சிக்காக தேர்தலில் நின்று இருக்கிறார். அதன்பின் இவர் அதிமுகவில் இணைந்தார். தீவிர அதிமுக விசுவாசியான இவர், எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதிமுகவிற்கு அடுத்தப்படியாக பாஜக கட்சியிலும் இருந்துள்ளார்.

கருணாநிதியை எதிர்த்தார்
அதேபோல் இவர் தீவிரமாக கருணாநிதியை எதிர்த்தார். பலமுறை கருணாநிதிக்கு எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார். 1980 சட்டமன்ற தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் கருணாநிதிக்கு எதிராக தேர்தலில் நின்று இருக்கிறார். அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சிகிச்சை
எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்ட போது இவர்தான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டவர். இதற்காக அப்போது அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை வரவழைத்தார். அதன்பின் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது அவரது சிகிச்சைக்கு ஆலோசனையும் உதவியும் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications