இதை விட எப்படி இவரால் எளிமையாக இருக்க முடியும்.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிடிக்குதோ, இல்லையோ, நல்லா இருக்கோ இல்லையோ... வேற வழியே இல்லை.. சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை இப்படிப்பட்ட காட்சிகளை நாம் பார்த்தே ஆக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு காட்சி இது.

தமிழகத்திலேயே மிகப் பெரிய கோடீஸ்வர வேட்பாளர்.. திமுகவின் கேசி பழனிச்சாமி அல்ல.. மாறாக வசந்த் அன் கோ உரிமையாளரும், காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு தலைவருமான எச். வசந்தகுமார்தான் அந்தக் கோடீஸ்வர வேட்பாளர்.

H Vasanthkumar visits roadside eatery

இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நாலு போட்டோவைப் போட்டு நச்சுன்னு ஒரு வாசகத்தையும் (ஆங்கிலத்தில்) போட்டுள்ளார். அந்த ஆங்கில வாசகமும், அதற்கான மொழி பெயர்ப்பும் (ஏதோ நமக்குத் தெரிஞ்ச தமிழில்!):

How much more simple can he be

(இதை விட எப்படி இவரால் எளிமையாக இருக்க முடியும்).

The richest candidate in TN but always believes in his ‪#‎roots‬ ‪#‎humble‬ ‪#‎simplicity‬ ‪#‎inspire‬ a great leader leading from the front.

(தமிழகத்தின் மிகப் பெரிய பணக்கார வேட்பாளர் எப்போதுமே தனது மூலத்தை மறந்து விடாமல், எளிமையாக, சாதாரணமானவராக திகழ்ந்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்).

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார் வசந்தகுமார். இந்தப் புகைப்படத்தில் ஒரு சாலையோர ஹோட்டலில், வெளியில் சேரைப் போட்டு உட்கார்ந்து டிபன் சாப்பிடுவதைப் போல உள்ளது. ஆனா அதுல கூட பாருங்க, டெய்லி டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர் என்பதால் தட்டை கையில் ஏந்தி சாப்பிட முடியாமல் தட்டுக்காக தனி சேர் போட்டு சாப்பிடுவதைக் காணலாம்.

H Vasanthkumar visits roadside eatery

அது சரி... தேர்தலுக்குப் பிறகும் கூட இதேபோல சாதாரணமான முறையில் காபி டிபன் சாப்பிடுவாரான்னுதான் தெரியலை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+