கையால் எழுதிய பாஸ்போர்ட்கள் நவம்பர் 24 முதல் செல்லாது: மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு
சென்னை: கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் நவம்பர் 24-ஆம் தேதி முதல் செல்லாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை நவம்பர் 24-ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவை பயன்பாட்டில் இருக்காது' என்று சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 24-ஆம் தேதிக்குப் பிறகும், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருப்போர், புதிதாக விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படலாம். மேலும், பயணத்தின்போது வேறு ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்ளவும் நேரிடலாம்.

2001-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளில் உள்ள விவரங்கள் கணினி மூலமே அச்சிடப்படுகிறது. சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளும்போது இவையே அனுமதிக்கப்படுகிறது.
குறிப்பாக, 1990-களின் மத்தியில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்கள் செல்லுபடியாகும் காலம் 20 ஆண்டுகளாகும். அவற்றின் காலம் இப்போது முடிந்திருக்கும். எனவே, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருப்போர், வரும் 24-ம் தேதிக்கு முன்பாக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்களை www.passportindia.gov.in என்ற இணையதளத்திலும், 1800-258-1800 என்ற இலவச சேவை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications