கொல்கத்தா இளவரசர் ‘தாதா’ கங்குலிக்கு பிறந்தநாள்...
கொல்கத்தா: ‘பெங்கால் டைகர்' என்ற செல்லப்பெயரோடும் கொல்கத்தா இளவரசர் என்றும் தாதா என்றும் அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் சௌரவ் கங்குலியின் 43வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. டுவிட்டரில் #HappyBirthdayDada என்ற ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் ஆக்கி வருகின்றனர் கங்குலியின் ரசிகர்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் 1972ம் ஆண்டு பிறந்தவர் சௌவுரவ் சந்திதாஸ் கங்குலி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கங்குலிக்கு தன் அண்ணன் பயிற்சியை பார்த்து தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. இயல்பாக இவர் வலது கை பழக்கம் உள்ளவர்; ஆனால் இடது கை ஆட்டக்காரராக தன் பயிற்சியை தொடங்கினார்.

கிரிக்கெட் பயணம்
தொண்ணூறுகளில் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. மைதானத்தின் ஓரத்தில் அமைதியாய், நின்று கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு விசயம் கங்குலியை கவனிக்கத் தக்கவராய் மாற்றியது. அந்த அலட்சியமான தலை அலங்காரம். அரும்பு மீசையும் குறும்பு பார்வையுமாய் மைதானத்தில் வலம் வந்த கங்குலி மீது முதலில் ஒரு பேட் பாய் லுக்தான் இருந்தது. அதுவே பின்னர் குட்பாய் லுக்கிற்கு உயர்த்தியது.
|
கேப்டன் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் காலம் முடிந்துவிட்டது. இந்திய அணியை முன்னணி வீரர்களால் கூட வழிநடத்த முடியவில்லை என்ற நிலையில், கேப்டனாக்கப்பட்டார் கங்குலி. இந்திய அணி என்றால், அந்நிய மண்ணில் ஜெயிக்காத அணி என்ற வரலாற்றை மாற்றி உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் நாட்டிலேயே வென்று இந்திய அணியில் அயல்நாட்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கங்குலி.

கொல்கத்தா இளவரசர்
இரண்டாயிரமாவது ஆண்டுகளில் கேப்டன் கங்குலியின் வெற்றி இன்னிங்ஸ் தொடங்கியது. அவரது அதிரடி ஆட்டம் ஆரம்பித்தது. தொடர் வெற்றிகளால் சாதனை படைத்த கங்குலியை கொல்கத்தா இளவரசர் என்று இளசுகள் கொண்டாடினர்.

சும்மா டி சர்ட்டை கழற்றி...
கேப்டன் ஆனவுடன் பொறுப்பும் கூடியது. ஆனால் முனுக் என்ற கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். லண்டனில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இங்கிலாந்தை வெற்றி பெற்று டி சர்ட்டை கழற்றி சுற்றிய வேகத்தில் கங்குலியின் கம்பீரம் வெளிப்பட்டது. ஊடகங்களில் சில நாட்களுக்கு இது பற்றிய பேச்சுதான். இந்த மைதானத்தில் தான் கங்குலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார்.
|
என்னா தைரியம்
எத்தனை பேர் வரலாம் யாரை வேண்டுமானாலும் கடவுளாக கொண்டாடலாம். ஆனால் அவங்க ஊர்ல போய் சட்டையை கழற்றி சுத்துற தைரியம் யாருக்கு வரும்? என்று கேட்கின்றனர் ரசிகர்கள்.

என்னா தத்துவம்
"உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்'' என்று அவ்வப்போது தத்துவமாக பேசி அசத்துவார் கங்குலி.
|
உலகின் மிகச்சிறந்த கேப்டன்
இந்திய அணியை 20 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிபோட்டிக்கு கொண்டு சென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தையே உலக அரங்கில் மாற்றினார் பெங்கால் டைகர் கங்குலி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் கங்குலியின் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளதை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
|
சச்சின் வாழ்த்து
கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமான வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் அவருடன் பல ஆண்டுகள் பயணித்த சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், நீங்க இப்பவும் எப்பவும் இளமைதான் தாதா என்று கங்குலியின் பிறந்தநாளுக்காக வாழ்த்து கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications