அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு சொன்னீங்களே உண்மைத்தன்மையை ஆராய்ந்தீங்களா திண்டுக்கல் சீனிவாசன் சார்?
அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு நீங்கள் மட்டும் ஆராய்ந்தா சொன்னீங்க என்ற திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி கேட்க தோன்றுகிறது.
சென்னை: அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு சொன்னீங்களே ஆராய்ந்தீங்களா, சசி குடும்பம் சொன்னதைதானே சொன்னீங்க என்று திண்டுக்கல் சீனிவாசனிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது பேரணியாக செல்ல பொதுமக்கள் முயற்சித்தனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லார் பழமொழி
இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் உண்மைதன்மையை ஆராய வேண்டும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இட்லி சாப்பிட்டார்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று திண்டுக்கல் சீனிவாசன், சி ஆர் சரஸ்வதி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொண்டர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.

உல்ட்டாவான திண்டுக்கல்
இதனிடையே கடந்த ஆண்டு ஒரு விழாவில் கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், அம்மா இட்லியும் சாப்பிடவில்லை, உப்புமாவும் சாப்பிடவில்லை. நாங்கள் பொய் சொன்னோம். சசிகலை குடும்பத்தினர் என்ன சொன்னார்களோ அதை செய்தோம் என்று கூறியிருந்தார்.

பொய் பிரசாரம் ஏன்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆராயாமல் தமிழக அரசை குறைக் கூறக் கூடாது என்று கூறும் திண்டுக்கல் சீனுவாசன், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதை ஆராய்ந்தாரா, அல்லது பார்வையிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா குறித்து பேசிவிட்டு பின்னர் சசிகலா கூறியதைதான் கூறுனோம் என்று கூறுவதை ஏற்கமுடியாது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications