தஷ்வந்த்துக்கு தூக்கு.. செல்போனில் ஹாசினி போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுத தந்தை
செல்போனில் மகள் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுதார் ஹாசினியின் தந்தை.
Recommended Video

செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து செல்போனில் மகள் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுதார் அவரது தந்தை பாபு.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
அதுபோல் சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசனும், தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இருப்பினும் தஷ்வந்த் 25 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
மதியம் 3 மணிக்கு தஷ்வந்த் குற்றவாளி என்று நீதிபதி வேல்முருகன் அறிவிக்கப்பட்ட நிலையில் 4 மணிக்கு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தார். இதை கேட்டதும் செல்போனில் இருந்த தனது மகளின் போட்டோவை பார்த்து கதறி அழுதார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் தனது மகள் சாவுக்கு நியாயம் கிடைத்துவிட்டது. இந்த சட்டபோராட்டத்தால் எனது மகள் திரும்ப கிடைக்க போவதில்லை. ஆனால் தஷ்வந்தால் மற்ற குழந்தைகள் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக போராடினேன் என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications