சுவாதி கொலைக்குற்றவாளியை கண்டுபிடித்த தமிழக போலீசாருக்கு பாராட்டுக்கள்- விவேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்த தமிழக போலீசாருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுவாதி கடந்த ஜூன் 24 ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

பொதுமக்கள் மத்தியில் அரங்கேறிய இந்தக் கொலை இந்தியாவையே அதிரச் செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்தது.

Hats Off Tamil Nadu Police says Vivek

இந்த வழக்கில் கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசாருக்கு உயர்நீதிமன்றம் சார்பில் கெடு விதிக்கப்பட்டது. எனினும் கொலைக்குற்றவாளி குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லாமல் போலீசார் தொடர்ந்து திணறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுவாதி கொலைக்குற்றவாளியை தமிழக போலீசார் கைது செய்தனர். கொலையாளியை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் சார்பாக பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக காவல் துறைக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் விவேக்கும் தன்னுடைய பங்குக்கு பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் ''குற்றவாளியை கண்டு பிடித்த தமிழக போலீஸின் இடையறாத உழைப்பு, திறமைக்கு நம் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள்'' என்று தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+