அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களுக்கு எதிரான மனு தள்ளுபடி
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே போட்டியிடுவதால் தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது,
மதுரை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்களை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் முறைகேடான முறையில் அதிக பணப்புழக்கம் நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் இரு தொகுதிகளுக்கும் தேர்தலை ரத்து செய்தது. அந்த தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த தேர்தலின் போது திமுக, அதிமுக உட்பட முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிட்டவர்களே தற்போதும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் போட்டியிடுவதற்கு தடை இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முறைகேடான பணப்புழக்கத்திற்கு காரணமானவர்கள் மீண்டும் போட்டியிடுவது முறையல்ல. அவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அந்த இரு தொகுதிகளுக்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இம்மனுவை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரித்து தள்ளுபடி செய்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications