தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! மணல் இறக்குமதிக்கு அனுமதி!! #sandquarry
தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

மதுரை: தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; அதை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் இயங்கும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்துக்குள் இழுத்து மூட வேண்டும்; புதிய மணல் குவாரிகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தின் தேவை கருதி வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யலாம். தமிழகத்தின் ஆறுகள் பாழாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை. இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
மேலும் மணல் கடத்தலைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications