சிறுவனைக் கொடூரமாக கொன்ற பூவரசி... ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஹைகோர்ட்
சென்னை: சென்னையில் ஆதித்யா என்ற 4 வயது சிறுவனை கொடூரமாகக் கொன்று உடலை சாக்குப் பையில் போட்டு பஸ்சில் உடலை அனுப்பி வைத்த பூவரசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர். இவரது மனைவி அனந்தலட்சுமி. இருவரும் காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது மகள் நிவேதிதா (8). மகன் ஆதித்யா (4).

ஜெயக்குமார் பணியாற்றிய நிறுவனத்தில், ஆரணியை சேர்ந்த பூவரசி என்பவரும் பணியாற்றினார். இருவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டது. கள்ளக்காதலாக மாறியது. பூவரசி கர்ப்பமானார். அதை ஜெயக்குமார் கட்டாயத்தின் பேரில் கலைத்துள்ளார்.
இந்த நிலையில் தன்னை 2வது திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரை நெருக்க வந்தார் பூவரசி. ஆனால் ஜெயக்குமார் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த பூவரசி, ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை 2010ம் ஆண்டு ஜூலை 17ம் தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து சென்றார்.. அங்கு வைத்து சிறுவனை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். உடலை சூட்கேசில் வைத்து, நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் வைத்துவிட்டார்.
பின்னர் சிறுவனை யாரோ கடத்தி விட்டதாக கூறி நாடகம் போட்டார். போலீஸ் விசாரணையில் பூவரசியின் குட்டு உடைந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் 2011ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பூவரசி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த தீர்ப்பில், சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் போலீசார் நடத்திய புலன் விசாரணையில் சிறு குறைபாடுகள் இருந்தாலும், அது வழக்கின் தன்மையை பாதிக்கவில்லை. சிறுவனை பூவரசி தான் கொலை செய்துள்ளார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி போலீசார் நிரூபித்துள்ளனர். எனவே, அவருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனை சரியானதுதான்.
அதேநேரம், பூவரசிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அந்த அபராத தொகையை ரூ.50 ஆயிரமாக குறைக்கிறோம். பூவரசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications