சட்டசபையில் ஜெ. படத்தை அகற்றக் கோரிய திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மனு தள்ளுபடி!
சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சட்டசபையில் ஜெ. படத்தை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி!
சென்னை: தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ரம் தள்ளுபடி செய்தது.
சட்டசபையில் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஏற்கனவே ஜெயலலிதாவின் உருவப்படம் அரசு நலத் திட்டங்களில் இடம்பெறக் கூடாது என திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்தும் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச், அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications