For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரீனாவில் போராட்டம் நடத்த தடை... தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்தது ஹைகோர்ட் பெஞ்ச்!

சென்னை மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் ஒரே ஒருநாள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்துதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போராட்டத்துக்கு அனுமதி அளிக்கும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்க்கும் வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்காக மெரினாவில் லட்சக்கணக்கானோர் பல நாட்கள் இரவு பகலாக ஒன்று திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். வெளிநாடுகளின் அரபு வசந்த புரட்சியைப் போல இந்த அமைதிப் புரட்சி நடைபெற்றது. அமைதி வழியில் நடைபெற்ற புரட்சியை போலீசார் வன்முறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    HC directs to Police to grant permission to one day Protest at Marina

    இதைத் தொடர்ந்து மெரினாவில் எந்த ஒரு ஒன்று கூடல், போராட்டங்களுக்கு ஓராண்டுக்கு மேலாக போலீசார் அனுமதிப்பது இல்லை. பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் தொடர்ந்து போராட முயற்சித்தாலும் போலீசார் கைது செய்து வந்தனர்.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவிரியை விட மெரினா கடற்கரையா முக்கியம் என தமிழக அரசை வெளுத்து வாங்கியிருந்தது.

    இந்த நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் காவிரி பிரச்சனைக்காக நாளை ஒருநாள் போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. மெரினாவில் ஒருநாள் போராட்டத்துக்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்தது. இந்த மனுவை தற்போது நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. தமிழக அரசு தரப்பில் அய்யாக்கண்ணுவுக்கு போராட்டம் நடத்த 3 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டதாக அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அதைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு தரப்பில் வாதம் நடந்தது.

    அதையடுத்து தீர்ப்பு அளித்த அமர்வு, மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. போராட்டம் நடத்த அனுமதி அளிக்கும் தனி நீதிபதியின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்று இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரினால், அதை பரிசீலிக்கலாம் என்றும் அமர்வு கூறியுள்ளது.

    English summary
    The Madras High Court today directed to Chennai Police to grant Permission to One Day Protest at Marina Beach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X