ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசு எதிர்ப்பு!
சென்னை: ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, பேரணி அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 7 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று(7ஆம் தேதி) மதியம் வந்தது. அப்போது, சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 காவல் நிலைய ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ''ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பாதுகாப்புப் படையினரைப் போன்று சீருடை அணிந்து செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மத வழிபாட்டுத் தலங்கள் வழியாகச் செல்லவும் திட்டமிட்டுள்ளதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டது'' எனக் கூறப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமசுப்பிரமணியன், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரியது. ஆனால் அக்கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications