ரூ460 கோடி கடன் பாக்கி.. வாசன் கண் மருத்துவமனையை மூடக் கோரும் வழக்கு மீது இன்று விசாரணை
சென்னை: ரூ460 கோடி கடனை திருப்பிச் செலுத்தாத வாசன் கண் மருத்துவமனையை மூடக் கோரும் வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
வாசன் கண் மருத்துவமனனயின் சொத்து மதிப்பு 2014-ஆம் ஆண்டில் ரூ. 5,500 கோடி; அன்னிய முதலீடாக ரூ. 192 கோடியையும் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் ரூ223 கோடி கருப்புப் பண பரிவர்த்தனை விவகாரத்திலும் வாசன் கண் மருத்துவமனை சிக்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த கருப்புப் பண விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்வதாக நமது ஒன் இந்தியாவிடம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கார்த்தி சிதம்பரம் இதனை மறுத்திருந்தார்.
இந்த நிலையில் ரூ460 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் வாசன் கண் மருத்துவமனையை இழுத்து மூடி அதன் சொத்துகளை விற்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
டெல்லியைச் சேர்ந்த கணேஷ்லால் ஜெயின், சுரேஷ் குமார் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், தங்களிடம் இருந்து பெற்ற கடனை வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் அடைக்க முடியவில்லை; அந்த நிறுவனத்தை மூடவும், அதன் சொத்துகளை விற்று கடன் தொகையை பெறுவதற்கு ஏதுவாக சொத்துத் தீர்வு அதிகாரியை நியமித்து உத்தரவிடவும் வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பாக கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் எனக் கூறியிருந்தார் நீதிபதி.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications