ரங்கா உள்ளிட்ட 200 தமிழ்த் திரைப்படங்களை டிவிடியில் வெளியிட இடைக்காலத் தடை
சென்னை: ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பிரபல நடிகர்கள் நடித்த ரங்கா, சிகப்பு ரோஜாக்கள், ஏழைஜாதி உள்ளிட்ட 200 தமிழ்த் திரைப்படங்களை டி.வி.டி, வி.சி.டி.களில் வெளியிட மாடர்ன் டிஜிடெக் மீடியா நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த கே.பி.ரவிசந்திரன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

நான் மூவி லேண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனம், ஆண்டவன் கட்டளை, சிகப்பு ரோஜாக்கள், ரங்கா, நீங்கள் கேட்டவை, ஏழை ஜாதி உட்பட 200 தமிழ் திரைப்படங்களின் வி.சி.டி., டி.வி.டி. உள்ளிட்ட பிற காப்புரிமைகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில், நாங்கள் காப்புரிமை பெற்றுள்ள படங்களை டி.வி.டி., வி.சி.டி.கள் தயாரித்து சென்னை கிண்டியிலுள்ள மாடர்ன் டிஜிடெக் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், மனுதாரர் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளதாக கூறப்படும் 200 திரைப்படங்களை வி.சி.டி., டி.வி.டி.களில் வெளியிட வரும் மார்ச் 5-ந் தேதி வரை மாடர்ன் டிஜிடெக் மீடியா நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மாடர்ன் டிஜிடெக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications