பிரஸ் க்ளப் தேர்தல்... நீதிபதி சந்துரு மேற்பார்வையில் நடத்த உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்ற (பிரஸ் க்ளப்) தேர்தலை மூன்று மாதங்களுக்குள் நடத்திமுடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடைசியாக 1999ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட்ட பிறகு, இந்த அமைப்பில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத குழுவினரே நிர்வாகம் செய்து வருகின்றனர். இது சரியல்ல என்றும் தேர்தலை நடத்தி முறைப்படி நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மூத்த செய்தியாளர் ஆர்.மோகன் வழக்கு தொடுத்தார்.

HC orders to conduct Press Club election within 3 months

அதில், 2011-ல் தேர்தலை நடத்திமுடிக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து மன்றத்தை நிர்வகிப்பவர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதில் செய்தியாளர்கள் செல்வராஜ், சுப்பையா, மணிகண்டன் ஆகியோர் தங்களையும் இணைத்துக்கொண்டனர்.

அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரித்த பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் நேற்று பிறப்பித்த உத்தரவில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் பிரஸ் க்ளப் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், இதனை நீதிபதி சந்துரு மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+