ஜெ. கைரேகை சர்ச்சை வழக்கு.. 24ம் தேதி தேர்தல் ஆணையர் லக்கானி ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெருவிரல் கைரேகை பி-படிவத்தில் பதியப்பட்டது தொடர்பான வழக்கில் மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்துடன் சேர்த்து பணப்பட்டுவாடா குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலும் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே. போஸ் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக வேட்பாளராக டாக்டர் பி. சரவணன் நிறுத்தப்பட்டார்.

ஜெ. கைரேகை
ஏ. கே. போஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கை ரேகை பதிவு செய்யப்பட்டது. அப்போது, ஜெயலலிதா உடல் நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது கை ரேகை பதிவு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தமிழகத்தில் ஏற்படுத்தியது

வழக்குப் பதிவு
இதனைத் தொடர்ந்து நடைபெற்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றி பெற்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏவானார். இந்த வெற்றியை எதிர்த்தும், ஜெயலலிதாவின் கைரேகை பதிவில் உள்ள சந்தேகம் குறித்தும் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

அப்பல்லோவில் ஜெ.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் அளித்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸை அங்கீகரித்து வேட்பு மனுவில், இடதுகை பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை விவரம்
இதுதொடர்பான அனைத்து ஆவணங்களுடன், மாநில சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகள் உள்ளிட்ட விவரங்களையும் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராகி சாட்சி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆஜராக லக்கானிக்கு உத்தரவு
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், வரும் 24ம் தேதி தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications