சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அரசு தயக்கம் காட்டுவது ஏன்?: ஹைகோர்ட்
சென்னை: எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதில் என்ன சிக்கல் என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகியோர் கடந்த ஜனவரி 23ம் தேதி கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மாணவிகளின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் மோனிஷாவின் உடல் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதேபோல் சரண்யாவின் உடலையும் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி அவரது தந்தை ஏழுமலை, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை செவ்வாய் கிழமையன்று தனி நீதிபதி ஆர்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களை கேட்டபிறகு தனி நீதிபதி மாலா அளித்த உத்தரவில், ‘மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதற்காக, சரண்யாவின் உடலையும் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது. மேலும் உடல் புதைக்கப்பட்டு 9 நாட்கள் கழித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை வரும் பிப்ரவரி 12ம் தேதி அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சரண்யாவின் தந்தை ஏழுமலை, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நேற்று மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பாக வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, ‘இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரிக்க வேண்டும்' என்று தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேசன் ஆகியோர் முன்பு கேட்டு கொண்டார். இதை கேட்ட நீதிபதிகள், இன்று வழக்கை எடுத்து கொள்ள முடியாது வியாழக்கிழமை விசாரிக்கிறோம் என்றனர்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமார்வு முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தன் மகளின் சாவில் மர்மம் உள்ளது என்று மனுதாரர் கூறுகிறார். மறு பிரேத பரிசோதனை கேட்கிறார். இதற்கு அரசு தரப்பில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்கள்.
பின்னர் நீதிபதிகள், ‘சரண்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுகிறோம். உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளிலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யலாம். மனுதாரர் தன் தரப்பு டாக்டர் ஒருவரை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் குழுவில் இடம் பெற செய்யவேண்டும் என்கிறார். இதை ஏற்க முடியாது. வேண்டுமென்றால், அவர் தரப்பு டாக்டர் ஒருவர், பிரேத பரிசோதனை செய்யும்போது, அவற்றை கண்காணிக்கலாம். இதுகுறித்து விரிவான உத்தரவை பின்னர் பிறப்பிக்கின்றோம்' என்று தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications