டாக்டர் ராமதாஸ், அன்புமணிக்கு போலீஸ் பாதுகாப்பு: ஹைகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே மணி மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அவர்கள் இருவரும் பாதுகாப்பு பெறத் தகுதியானவர்கள். ஆகையால் குறைந்த பட்சம் துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீஸார் 24 மணி நேரமும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பை செவ்வாய்க்கிழமை (5.11.13) 6 மணி முதல் தமிழக அரசு வழங்க வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை இந்தப் பாதுகாப்பு தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் இடைக்கால உத்தரவில் தெரிவித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே மணி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க தேவையில்லை என்று பாதுகாப்பு ஆய்வுக் குழு (எஸ்.ஆர்.சி) கூறியதையடுத்து, அந்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே மணி மீண்டும் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications