For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேட்பு மனு நிராகரிப்பு: நீலகிரி பாஜக வேட்பாளர் மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி!!

By Mathi
|

சென்னை: நீலகிரி தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக குருமூர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் வேட்புமனுவை தாக்கல் செய்த போது அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பதற்கான சான்றிதழை இணைக்கவில்லை. அதேபோல் பாஜகவின் மாற்று வேட்பாளரும் தமது மனுவில் அந்த சான்றிதழை இணைக்கவில்லை.

HC rejects Nilgiris BJP Candidate petition

இதனால் குருமூர்த்தி மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குருமூர்த்தி நேற்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் முறையிட்டிருந்தார். ஆனால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று அவரது மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்துவிட்ட நிலையில் குருமூர்த்தி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

English summary
The Madras High Court rejected the petition of Nilgiris BJP Candidate S Gurumurthy against his nomination rejected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X