நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: மாதையன் உட்பட 11 பேருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு!
சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திய வழக்கில் மாதையன் உட்பட 11 பேருக்கான ஜாமீன் நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் 2000-ம் ஆண்டு வனப்பகுதிக்குள் கடத்திச் சென்றனர். ராஜ்குமாரை விடுவிக்கும் முயற்சியின்போது, வீரப்பனுக்கு ரூ.15 கோடி கொடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணம் வீரப்பனின் அண்ணன் மாதையன் உட்பட 11 பேருக்கு வழங்கப்பட்டதாகவும் கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஈரோடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து, வீரப்பனின் அண்ணன் மாதையன் உட்பட 11 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மாதையன் உட்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் மாதையன் உட்பட 11 பேருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்திவைத்த உயர்நீதிமன்றம், 11 பேரும் சத்திய மங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி மாதையன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா இவ்வழக்கை விசாரித்து, மாதையன் உள்ளிட்ட 11 பேரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications