விஜயகாந்த், பிரேமலதாவுக்கு தலா ரூ. 24,000 அபராதம்... உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: நீதிமன்றத்தின் நேரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வீணடித்து விட்டதாக கோபமடைந்த சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் இன்று விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட 4 பேருக்கு தலா ரூ. 24,000 அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டது.
தேமுதிக பொதுக்கூட்டங்களிலும், அதேபோல அறிக்கை மூலமும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதேபோல, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.பார்த்தசாரதி உள்ளிட்டவர்களும் விமர்சனங்கள் செய்து வந்தனர். இதையடுத்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, விஜயகாந்த், பிரேமலதா மற்றும் இருவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த அவதூறு வழக்குகள் தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் அரசு வக்கீல்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்ய வழிவகை செய்யும் குற்றவியல் விசாரணை முறைச் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில், விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட 4 பேர் சார்பில் மொத்தம் 12 வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த நிலையில், சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு அடுத்தடுத்து சில அவதூறு வழக்குகளைப் போட்டது. அவர் உடனடியாக உச்சநீதிமன்றத்துக்குப் போய் விவரமாக ஸ்டே வாங்கி விட்டார். இந்த நிலையில் விஜயகாந்த் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் கடந்த மாதம் தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் உள்ளிட்டோரின் வக்கீல்கள் ஆஜராகி, இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் கொண்டு செல்ல விரும்புவதாகவும், அனுமதிக்குமாறும் கோரினர். இதற்கு நீதிபதிகளும் அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை இன்னும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவில்லையா என்று நீதிபதிகள் விணவினர்.
அதற்கு விஜயகாந்த்தின் வழக்கறிஞர் எழுந்து, இந்த வழக்குகளில் சில தமிழ் ஆவணங்கள் உள்ளது. இவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டியதுள்ளது. எனவே, இந்த வழக்குகளை மாற்ற ஒரு வாரம் கால அவகாசம்வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டுக் கோபமடைந்த நீதிபதிகள், ஏற்கனவே, அனுமதி வழங்கி பல நாட்களாகிவிட்டது. ஆனால், இதுவரை வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் இந்த ஐகோர்ட்டில் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
எனவே, இந்த 12 வழக்குகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கின்றோம். இந்த அபராதத் தொகையை மனுதாரர்கள் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், 12 மனுக்களையும் தள்ளுபடி செய்து விடுவோம் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
-
விஜயகாந்தின் வலதுகரத்திற்கே சீட் இல்லையா.. தேமுதிகவில் புதிய பஞ்சாயத்து -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications