பிறப்பிலேயே அவர் அப்படித்தான்.. விடாது போராடும் கருணாநிதி.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!
திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து தனது உடல் குறைபாடுகளுடன் போராடி வருகிறார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து தனது உடல் குறைபாடுகளுடன் போராடி வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி தற்போது மிக முக்கியமான உடல் கட்டத்தில் இருக்கிறார். அவரது உடல்நிலை நிமிடத்திற்க்கு நிமிடம் நலிவடைந்து கொண்டே இருக்கிறது.
95 வயதிலும் அவர் மிக தீவிரமாக போராடி வருகிறார். அவரது உடல்நிலையில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அவரை தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

மோசமானது
கருணாநிதியின் உடல்நிலை கடந்த 15 நாட்களுக்கு முன்பு மிகவும் மோசமானது. அப்போது அவரது தொண்டையில் டிரகியாஸ்டமி குழாய் மாற்றப்பட்டு இருந்ததால் உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் உடனடியாக அவரது உடல்நிலை சரியானது.

பிரச்சனை
இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் இரண்டு முறை அவரது உடலில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த முறை சிறுநீரக நோய் தொற்று மட்டுமில்லாமல், சுவாச பிரச்சனையும் ரத்த அழுத்தமும் ஏற்பட்டது. இந்த ரத்த அழுத்தம் தான் அவரது உடலை மிகவும் மோசமாக்கியது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி அதில் இருந்து மீண்டும் வந்ததாக கூறப்படுகிறது.

மிகவும் மோசமானது
இந்த நிலையில் சக்கர நாற்காலியில் உட்காரும் அளவிற்கு உடல்நிலை சரியான கருணாநிதி, தற்போது மீண்டும் மோசமான நிலையை அடைந்து இருக்கிறார். இந்த முறை அவருக்கு கல்லீரல் நோய் தொற்றும் கூடுதலாக ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடல்நிலை மொத்தமாக சுணக்கம் ஏற்பட்டு நலிவடைந்து இருக்கிறது.

போராட்டக்காரர்
அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள். அவருக்கு சிறுவயதில் இருந்தே இருக்கும் போராட்ட குணம், இப்போதும் மருத்துவமனையில் தொடர்கிறது. என்ன ஒரு போராட்டக்காரர் அவர் என்று திமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல், மருத்துவர்களும், மக்களும் வியந்து கொண்டு இருக்கிறார்கள்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications