பள்ளி மாணவியிடம் அத்துமீறல்... போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளிடம் இயல்பாக பேசுவதுபோல் பேசி, பாலியல் சீண்டல்களில் ஒருசில ஆசிரியர்கள் ஈடுபடுவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பங்களை ஊடகத்துறை தொடர்ந்து வெளிச்சம்போட்டு காட்டினாலும், அறுவறுக்கத்தக்க இதுபோன்ற நிகழ்வுகளும் இன்னும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. அதுபோன்ற சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்படு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பால்வண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அந்தப் பள்ளியில் பயின்று வரும் 5-ம் வகுப்பு மாணவிடடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது தந்தையிடம் கூறியதால் அதிர்ச்சியடைந்த அவர், பள்ளி தலைமை ஆசிரியர் பால்வண்ணன், தனது மகளிடம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உமரபாத் காவல் துறையினர், பள்ளி தலைமை ஆசியரிடம் விசாரணை நடத்தினர். அவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று ஏற்கெனவே பேர்ணாம்பட்டு அருகே பணிபுரிந்தபோது, பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமானது. இதனையடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் பால்வண்ணனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
பள்ளி மாணவிக்கு ஆசானாக இருந்து, பல்வேறு நல்ல தகவல்களை எடுத்துக்கூற வேண்டிய தலைமை ஆசிரியரே, இதுபோன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வேலியே பயிரை மேய்வது போன்று நடைபெறும் இதுபோன்ற விரும்பதகாத சம்பவங்கள், மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications