Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்காசியில் யாருங்க இந்த தவெக பெண்? என் கூடவே விஜய் போட்டோவையும் புதைச்சிடுங்க, மலைத்த புளியங்குடி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி மிகுந்த உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகிறது. கட்சி தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பூத் கமிட்டி அமைப்பது முதல் அடிமட்ட அளவில் பெண்களை ஒருங்கிணைப்பது வரை மகளிர் அணியினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. அப்படித்தான் தென்காசியில் நேற்று நடந்துள்ளது.

தேர்தல் நெருங்குவதால் குடும்பத் தலைவிகள் மற்றும் இளம்பெண்களை கவரும் வகையில் தவெக-வின் கொள்கைகளை வீடு வீடாகக் கொண்டு செல்வதில், மகளிர் அணியினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

TVK woman

விஜய் தவெக

மற்ற திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு இணையாகத் தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில், மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் மகளிர் அணியினர், வரும் தேர்தலில் பெண்களின் வாக்கு வங்கி தவெக-விற்கு பெரும் பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

கட்சியின் முதல் மாநாட்டிற்குப பிறகு இவர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, களப்பணிகளில் வேகத்தை அதிகரித்துள்ளதுடன், தேர்தல் நேரத்தில் கட்சியின் வெற்றிக்குத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் அடிக்கடி சில சர்ச்சைகள் நடந்து வருவதையும் மறுக்க முடியாது..

கடந்த நவம்பர் மாதம் நாமக்கல்லில் ஒரு சம்பவம் நடந்தது.. நாமக்கல் மாவட்டத்தில் தவெகவின் கிழக்கு மாவட்ட செயலாளரான செந்தில்நாதன், கூட்டப்பள்ளியில் உள்ள மகளிர் அணி நிர்வாகி ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி சென்று உள்ளே கதவை பூட்டி உள்ளார்.

தவெக பெண் நிர்வாகி

இதை அறிந்த பெண் நிர்வாகியின் உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணுடன் செந்தில்நாதன் இருப்பதை கண்டு, சம்பந்தப்பட்ட பெண்ணை உறவினர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடங்களில் வெளியானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வந்த நிலையில், செந்தில்நாதன் தவெக கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

அதேபோல கடந்த மாதம் தவெக மாவட்ட செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் கட்சியின் தலைவர் விஜய்யின் காரை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெகவில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை' என நிர்வாகி அஜிதா கண்ணீர் மல்க தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.

தென்காசி புளியங்குடி தவெக

இந்நிலையில் தென்காசியில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. தென்காசி மாவட்டம், புளியங்குடி மின்வாரிய அலுவலகம் எதிரில் தவெக கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது..

இந்த கூட்டத்தில் பேச்சாளர்கள் மேடையில் பேசி கொண்டிருக்கும்போதே, ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் விசில் அடித்தும் ஆட்டம் ஆடியும் ஆரவாரம் செய்தனர்.

அப்போது கூட்டத்தில் நகர மகளிர் அணி அமைப்பாளர் அருள்ஜோதி என்பவரு பேசினார்.. "நான் சாகுறதுக்கு முன்னாடி விஜய்யை பார்த்துடணும்.. அது நடக்கவில்லை என்றால், ஒருவேளை, எனக்கு ஏதாவது ஆகி விட்டால் அல்லது இயற்கையாக இறந்து விட்டால் என்னை யாரும் எரித்து விடக்கூடாது புதைக்க வேண்டும். என்னை புதைக்கிற குழியில் விஜய் போட்டோவை கூடவே வைக்க வேண்டும்.

விஜய் போட்டோ

என்னோட குடும்பத்தில் இருப்பவர்கள் மறந்து விட்டார்கள் என்றாலும் தளபதி எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும். நான் தனியாள் கிடையாது. அதனால அவருடைய பெயரை என்னுடைய கையில் பச்சை குத்தியிருக்கிறேன்.

என்னோட ரேஷன் கார்டில் விஜய் பெயரை சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், விஜய் யார் என்று கேட்டார்கள்.. உடனே நான், யாராக இருந்தால் என்ன, அவர் பெயரை சேர்க்க வேண்டும் என்றேன்..

அதற்கு அவர்கள் அவரின் ஆதார் கார்டு கொண்டு வாருங்கள் என்றனர். இங்கு மேடையில் இருக்கும் நபர்கள் யாராவது விஜய்யின் ஆதார் கார்டு வாங்கி கொடுங்கள் என்று மைக்கில் சத்தம் போட்டு கேட்டார்.. மகளிர் பெண் நிர்வாகி அருள்ஜோதி பேசிய இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+